Saturday, May 14, 2011

சர்வே என்பது என்ன?



சர்வே பற்றி அறிய அனேகமாக தமிழில் குறிப்பிடத்தகுந்த புத்தகங்கள் எதுவும் இல்லை.  சர்வே என்றவுடன் அரசாங்கம் சார்ந்த நில அளவைத்தான் நினைவுக்கு வரும்.  ஆனால் அரசு துறையில் நில எல்லை (Boundary) சார்ந்த பணிகளை மட்டுமே மேற்கொள்ள படுகிறது.  

இங்கு நாம் குறிப்பிடும் சர்வேயர் பணி, அதிக தொழில்நுட்பம்  (Technology) சார்ந்தது.  ஜி.பி.எஸ். / டோடல் ஸ்டேஷன் / ஆட்டோ லெவல் / சாட்டிலைட் மூலம் பெறப்படும் புகைப்படங்கள் / வானூர்திகளில் இருந்து பெறப்படும் புகைப்படங்கள் மற்றும் இன்னபிற வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தியும் சர்வே சார்ந்த பணிகள் வழங்க படுகின்றன.  எல்லை சார்ந்த நில அளவை என்பது இதன் ஒரு பகுதிதான்.  

சர்வே என்பது,

1 ) குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலத்தில், நவீன மின்னணு சாதனங்கள் மூலம் பல விதமான அளவுகள்/தகவல்களை சேகரிப்பதும்,  (Field Survey and Data Collection with Electronic Instruments)

2 ) சேகரிக்கப்பட்ட தகவல்களை கணினியின் மூலம் 2D /3D வரைபடங்களாக தயாரிப்பதும்,  (Data processing and preparing 2D/3D Maps in Computer)

3 )  வரைபடங்களில் உள்ள அளவீடுகளை துல்லியமாக நிலத்தில் கண்டறிந்து குறிப்பதும் ஆகும்.  (Setting out and marking at Field)



இந்தியாவை பொறுத்த வரை, சமிப காலங்களில் சர்வே சார்ந்த பணிகள் பெருகி வருகிறது.  நெடுஞ்சாலை, விமான நிலையம், மின் பகிர்வு, ரயில்வே துறை மற்றும் புதிய தொழில் நகரமைப்பு ஆகியவை வளர்ச்சி பெறுவதால், சர்வே சார்ந்த பணிகளுக்கும் தேவைகள் அதிகமாகிறது.  

எந்த கட்டுமான வளர்ச்சி பணிகளுக்கும் சர்வே பணிகளே அடிப்படை.  திட்டமிடல் / வடிவமைப்பு / மற்றும் மதிப்பிடல் ஆகியவைக்கு துல்லியமான சர்வே மிக முக்கியம்.  

ஒட்டுமொத்த இந்தியாவின் சர்வே தேவைகளின் பெரும்பகுதியை தமிழகம்தான் குறிப்பாக சென்னைதான் நிறைவு செய்கிறது.   (டோபோக்ராபிக் சர்வே )


தொடர்ந்து சர்வே பற்றி இங்கே தகவல்கள் இடம் பெரும்.  

வேலை வாய்ப்பு - சர்வேயர்


நாங்கள் 2002-ம் வருடம் முதல் 'குட்லேன்ட் சர்வேஸ்'  என்கிற இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.  வருடத்திற்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்கிற நிறுவனம் ஆகும். 

நெடுஞ்சாலை, தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மையங்கள், விமான நிலையங்கள், புதிய நகரமைப்புகள், மின்சாரம், இரயில் போக்குவரத்து, வீட்டு வசதி கட்டுமானங்கள் மற்றும் நீர் பாசனம் (அணை கட்டுகள், ஆறு மற்றும் வாய்க்கால்) ஆகிய அணைத்து துறைகளுக்கும் சர்வே சார்ந்த சேவைகளை வழங்குகிறோம்.  

எங்களுடன் இணைந்து பணிபுறிய இப்போது சர்வேயர் பணியிடங்கள் உள்ளன.

குறைந்தபட்ச தகுதிகள்

1 ) படிப்பு
10 -வது , +2 (அ) எந்த டிகிரியும் போதுமானது.

2 ) ஆர்வம்
பிற மொழி கற்கும் ஆர்வம், கடின உழைப்பும், பிற மாநில பயணமும், அதிக நாட்கள் வெளியூர்களில் தங்க வேண்டியதும் அவசியம்.

3 ) உடல்/இதர  தகுதி
நல்ல ஆரோக்கியம் அவசியம்.  19 வயதுக்கு மேற் பட்டவர்கள் மட்டும்.

வருமானம்

10-th /12th முடித்தவர்கள் = Rs.5000 /-

Diploma in Civil முடித்தவர்கள் = Rs .6000 /-

தவிர,  உணவு, இருப்பிடம் மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தும் எங்களால் ஏற்று கொள்ளப்படும்.  1 வருட அனுபவத்திற்கு பின் இதில் கிடைக்கும் வருமானம் எதிர்பார்ப்புக்கும் அதிகமானது.  வெளிநாடுகளில் கிடைக்கும் வருமானம், இந்திய மதிப்புக்கு ரூ. 60000 க்கும் அதிகம்.  

ஆர்வமுள்ளவர்கள் கடிதம் / இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கவும்.  குட்லேன்ட் சர்வேஸ், 3 /12 , தர்மராஜா நகர் 4 -வது தெரு, காரம்பாக்கம், சென்னை